என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தாய் உயிரிழப்பு
நீங்கள் தேடியது "தாய் உயிரிழப்பு"
அரக்கோணத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட மகனுடன் விஷம் குடித்த தாய் உயிரிழந்தார். அரசு ஆஸ்பத்திரியின் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் ரத்தினம் தெருவை சேர்ந்தவர் வள்ளி (வயது 48). கணவரை இழந்தவர். இவருடைய மகன் நாகராஜன் (வயது 28). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்தார். அப்போது, கம்பெனியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் நாகராஜனுக்கு முதுகெலும்பு முறிந்ததுடன், உடல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அவரை குணப்படுத்த அந்த நிறுவனம் ரூ.95 லட்சம் மருத்துவ செலவை ஏற்றது. தீவிர சிகிச்சை அளித்தும் நாகராஜனை குணப்படுத்த முடியவில்லை. இதனால் நாகஜராஜனும், அவர் தாயும் மனமுடைந்தனர். நேற்றிரவு வீட்டில் இருந்த நாகராஜனும், அவரது தாயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
விஷம் குடித்ததில் வாயில் 2 பேருக்கும் வாயில் நுரை தள்ளியது. வள்ளி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். நாகராஜன் மயக்க நிலையில் கிடந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து வள்ளி வீட்டிற்கு சென்று பார்த்தனர்.
அப்போது, விஷம் குடித்த நிலையில் கிடந்த 2 பேரையும் பார்த்து அதிர்ந்து போயினர். உடனடியாக அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கு பரி சோதித்த டாக்டர்கள், வள்ளி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். நாகராஜன் கவலைக்கிடமாக இருந்தார்.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

×

X